ஒருமித்த விதை நேர்த்தி குறித்து வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல் விளக்கம்

0 307
Stalin trichy visit

திருச்சி, மே 6  திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் ஊராட்சியில் உள்ள கோட்டைபாளையம் கிராமத்தில் வயல் வெளியில் ஒருமித்த விதை நேர்த்தி ( Designer seeds) குறித்து செயல் விளக்கம் அளித்த முசிறி எம்.ஐ.டி வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள்.

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாரத்தில் எம்.ஐ.டி வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் கிராம வேளாண் பணி அனுபவ பயிற்சி திட்டத்தில் விவசாயம் சார்ந்த பல்வேறு களப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக எம்.ஐ.டி வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் துர்கேஷ்,கோகுல்,
பிரகாசம்,கௌதமன்,குணாளன்,இஷாக்,ஜெயராகவன்,ஜெயந்த்ராஜன், மற்றும் கார்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு வேளாண்மையில் ஒருமித்த விதை நேர்த்தி மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.