வளரும் கவிஞருக்கான கவிச்சுடர் விருது பெற்ற பள்ளி மாணவி

0 270
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவி தனது கவிதைத் திறனால் வளரும் கவிஞருக்கான கவிச்சுடர் விருது பெற்றார்.

திருச்சி மாவட்டம் சமயபுரத்தைச் சேர்ந்தவர் பள்ளி மாணவி யாழினி. இவர் சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு கல்வி பயின்று வருகிறார். பள்ளி மாணவி யாழினி இணையதளம் வழியாக நடைபெற்ற கவிதை,பட்டிமன்றம்,பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று பல்வேறு சான்றிதழ்களை பெற்றுள்ளார். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு பாரதி பாவாணர் செந்தமிழ் வானம் என்னும் தமிழ் அமைப்பு சார்ந்த தராசு நூல் வெளியிட்டு விழாவில் கவிஞர்களைக் கொண்டாடும் விழா கரூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி யாழினிக்கு வளரும் கவிஞர் விருதும், கவிச்சுடர் விருதும் மற்றும் பேச்சுக்கான சொற்சுடர் விருதும் வழங்கி சிறப்பித்தார்கள்.

வளரும் கவிஞர் சு.அ.யாழினி, கவிச்சுடர் விருதை பெற்று பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த மாணவி யாழினியை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

Leave A Reply

Your email address will not be published.