தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

0 201
Stalin trichy visit

திருச்சி, மே 7  திருச்சி மாவட்டம் சமயபுரம் கடைவீதி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். செல்போன், பணம், மோட்டார் பைக், லாட்டரி சீட்டு நோட் பண்ணும் இரண்டு புக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் கடைவீதி பகுதியில் சமயபுரம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த மூன்று பேரை பிடித்து விசா  கிருஷ்ணபாரதி (42) மற்றும் அழகுராஜ் (40), சமயபுரம் அருகே இருங்களூரைச் சேர்ந்த  அமல வினோத் (34) என்கின்ற வினோத் ஆகியோர் என தெரியவந்தது.

பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டு நோட் பண்ணுவதற்கான இரண்டு புக் ,இரண்டு செல்போன், பணம் ரூ. 1660 ஒரு மோட்டார் பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.