கோடை கால நீர்மோர் பந்தல் : அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

0 353
Stalin trichy visit

திருச்சி, மே 7 திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்றம் சங்கம் சார்பில் கோடைகால நீர் மோர் பந்தலை அமைச்சர் கே.என் நேரு திறந்து வைத்தார்.
கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க திருச்சி தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு போக்கு வரத்து கழக தொழிலாளர் முன்னேற்றம் சங்கம் சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். திருச்சி மண்டல போக்குவரத்து பொதுச் செயலாளர்குணசேகரன் ஏற்பாட்டில் திறக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் தர்பூசணி, வெள்ளரி, இளநீர், நுங்கு, உள்ளிட்ட ஜூஸ் வகைகள் மற்றும் நீர் மோர் ஆகிய வற்றை அமைச்சர் கே.என். நேரு பொதுமக்களுக்கு வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.