சாலையைக் கடக்க முயன்றவர் மீது கார் மோதியதில் உயிரிழப்பு
திருச்சி, மே 15 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாடக்குடியில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்றவர் மீது அவ்வழியே வந்த கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காந்த நகரை சேர்ந்தவர் மருதராஜ்(50) .இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி – சிதம்பரம் தேசிய சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மாடக்குடியில் உள்ள பங்குனி வாய்க்கால் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் விரகாலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆரோன் மரியசூசை (34)ஓட்டி வந்த கார் மருதராஜ் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த மருதராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னா் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.