மணப்பாறையில் மூதாட்டியிடம் 5 பவுன் தங்கச் செயின் பறிப்பு : காவல்துறையினர் விசாரணை
திருச்சி, ஜூன் 18 திருச்சி மாவட்டம் மணப்பாறை வாகைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (68) இவர் நேற்று மாலை விராலிமலை சாலையில் இவரும் அவரது மூத்த மகளான கார்த்திகா இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். வாகைகுளம் ரோடு அருகே சென்றபோது இவர்களுக்கு பின்னால் அடையாளம் தெரியாத சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பின் தொடர்ந்து வந்த நிலையில் திடீரென அவரது கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்கச் சங்கிலி பறித்துக் கொண்டு சிறிது தூரம் ஓடி இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றார்.
இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த மணப்பாறை காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று இச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மூதாட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.