திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy
திருச்சி மாவட்டம் நவல்பட்டு ஐயம் பட்டியைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் மின் வாரியத்தில் கடந்த 1 வருடத்திற்கு முன்பு பணியில் சேர்ந்துள்ளார்.
தாய், தந்தை இறந்து விட்ட நிலையில் தனிமையில் இருந்த இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மதுவை விட முடியாமல் இருப்பதால் இன்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, மதுவில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் வீடியோ ஒன்று பதிவிட்டு தனது சித்தப்பாவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதில் யாரிடமும் பேசாமல் தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்ந்து உள்ளேன். இவ்வளவு நாளா எனக்கு தெரியவில்லை இப்போது தான் தெரியுது என்னைப்போல் இருப்பவர்கள் உயிருடன் இருக்கக்கூடாது மன்னிக்கவும் அப்பா அம்மா தங்கச்சி பாய் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல் அவர் எழுதிய கடிதத்தில், அப்பா அம்மா என்னை மன்னித்து விடுங்கள் நான் உங்களை விட்டுப் போகிறேன் என் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்னை மன்னித்துவிடுங்கள் என்னால் குடி பழக்கத்தை விட முடியவில்லை என் மரணத்திற்கு காரணம் என் குடிப்பழக்கம் என்னை போல் யாரும் குடிகாரர்களாக மாறி விடாதீர்கள். குடிப்பழக்கம் ஒருவன் வாழ்க்கை எப்படியெல்லாம் மாற்றும் என்று நான் தெரிந்து கொண்டேன்.குடிப் பழக்கத்தை விட முடியவில்லை. அதனால் கடைசியாக மதுவில் விஷம் கலந்துகுடிக்கிறேன்.
வீடியோ பதிவை பார்த்த அவரது உறவினர்கள், இளையராஜாவின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு அவர் மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மது பழக்கத்தை விட முடியாததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.