மதுபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்ட மகனை வெட்டிய தந்தை
திருச்சி, மே 18 திருச்சி மாவட்டம், மணப்பாறை கரிக்கான்குளம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முருகேசன். இவரது மகன் சதீஷ் குமார் (வயது 35). மது பழக்கத்திற்கு ஆளான சதீஸ்குமார் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால் தந்தை மகன் இருவருக்குமிடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்படும் நிலையில் நேற்று மாலை வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த முருகேசன் அரிவாளை எடுத்து வந்து வீட்டில் இருந்து சற்று தொலைவில் மணப்பாறைபட்டி சாலையில் தனியார் திருமண மஹால் அருகே நின்றுகொண்டிருந்த மகன் சதீஷ்குமாரை வெட்டியுள்ளார். இதில் இடது கையில் படுகாயம் அடைந்த சதீஸ் குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த தந்தை முருகேசன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.