தொட்டியம் திரிபுரசுந்திரி உடனுறை அனலாடீஸ்வரர் கோவிலில் திருத்தேரோட்டம்

0 197
Stalin trichy visit

திருச்சி, மே 21  தொட்டியத்தில் திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் கோவில் வைகாசி விசாக பெருந்திருவிழா திருத்தேரோட்டம்

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 12ஆம்தேதி கொடியேற்றத்துடன் வைகாசி விசாக தேர்திருவிழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்று பல்வேறு அலங்கார  வாகனங்களில் சுவாமி திருவீதிவுலா நடைபெற்று வந்தது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை கைலாய வாத்தியங்கள் முழங்க நடைபெற்றது.

இதில் திருத்தேரின் வடத்தினை முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் மற்றும் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் பிடித்து இழுத்து முக்கிய வீதிகள் வழியாக சுற்றி வந்தனர். முன்னதாக சிவனடியார்கள் தேருக்கு முன்பு கைலாய வாத்தியங்கள் வாசித்தும், பெண்கள் கும்மியடி, கோலாட்டம் ஆடி மகிழ்ந்தனர். தொட்டியம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சார்ந்த திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வைகாசி விசாக விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.