அரசுப்பள்ளிகளில் 3.11 லட்சம் மாணவ செல்வங்கள் புதிதாக சேர்ந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம்

0 332
Stalin trichy visit

அரசுப்பள்ளிகளில் 2 லட்சத்தி 11 ஆயிரத்தி 476 மாணவ செல்வங்கள் புதிதாக சேர்ந்துள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குப்பில்,  தமிழ்நாடு முதலமைச்சர்  பிறந்த நாளான மார்ச் 01, 2024 அன்று 2024-2025’ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை,  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அமைந்துள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தோம்.

அரசுப் பள்ளிகளின் மீது நம்பிக்கை கொண்டு இதுவரையிலும்
3 லட்சத்தி 11 ஆயிரத்தி 476 மாணவச் செல்வங்கள் புதிதாக இணைந்துள்ளார்கள் என்பதை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் தந்தை முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாளில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.

“அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல! பெருமையின் அடையாளம்” என்பதை நிலைநிறுத்தி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞருக்கு புகழ் சேர்ப்போம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.