100 மணி நேரம் சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி : அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

0 214
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 4  திருச்சியில் 100 மணி நேரம் இடைவிடாத சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிஅமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்  நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இராவணன் சிலம்பம் அகடாமி சார்பில் சிலம்ப வீரர் வீராங்கனைகளில் உலக சாதனை நிகழ்ச்சி திருச்சி பாலக்கரை பொன்னையா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது இந்த உலக சாதனை நிகழ்ச்சியை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார்.

முன்னதாக பாலக்கரை பகுதி கழக செயலாளர் ராஜ் முகமது வரவேற்புரையாற்றினார். மாநகர கழக செயலாளர் மதிவாணன் முன்னிலை வகித்தார். மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர் தூவி மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து 100 மாணவர்களைக் கொண்டு 100 மணி நேரம் இடைவிடாத சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த சிலம்ப சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று சிலம்பம் சுற்றினர். இந்த உலக சாதனை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராவணன் சிலம்பம் அகடாமி வாத்தியார் இலக்கிய தாசன் செய்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.