உள்ளாட்சி தேர்தலிலும் த.வெ.க.வுடன் இணைந்து போட்டியிடும் : அமைச்சர் ஷாஜகான் பேட்டி

0 15
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 11  திருமாவளவனின் கருத்து அவரது நிலைப்பாடு – அவரது கருத்தால் கூட்டணியில் பாதிப்பு இல்லை – உள்ளாட்சி தேர்தலிலும் தமிழக வெற்றிக்கழக கூட்டணி இணைந்து போட்டியிடும் – சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பேட்டி

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நிறுவன நாள் விழா இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது ,விழாவில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர்…

கரூரில் பாதிக்கப்பட்டுருக்கு அரசு வேலை வழங்கியது குறித்து பலர் விமர்சனம் செய்வது வழக்கம் தான் 41 பேர் உயிரிழந்துள்ளனர் அந்த குடும்பத்தின் நன்மை கருதி அவர்களுக்கு வழங்கி இருக்கிறார்கள் அதில் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை.

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரின் கருத்தாக இருக்கலாம் தமிழகத்தை பொறுத்த அளவில் தமிழக வெற்றி கழகம் தலைமையில் ஒரு கூட்டணி அமைந்திருக்கிறது அந்தக் கூட்டணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம் இந்த கூட்டணி வருகின்ற உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தலிலும் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் அதன்படியே தேர்தல் பணியும் ஆற்றுவோம்.

இடைத்தேர்தலுக்கு தடை விதித்ததால் சில காலதாமதம் ஏற்படலாம் ஆனால் நிச்சயம் தமிழக வெற்றி கழகத்தின் தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும்.

போதைப் பொருள் புழக்கம் என்பது இந்த ஆட்சியில் மட்டுமில்லை கடந்த ஆட்சி காலத்திலும் இருந்துள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள் வருகிறது அதனை தடுக்க அரசு தீவிரமாக எடுத்து வருகிறது.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்க வாய்ப்பு இருக்கிறது அது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது கடந்த 15 நாட்களாக துரை ரீதியாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து ஆய்வு கூட்டத்தை முதலமைச்சர் நடத்தி வருகிறார்.

15 சதவீதம் இருக்கக்கூடிய சிறுபான்மையினர் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை முதலமைச்சருடன் எடுத்து வைத்துள்ளோம் வரக்கூடிய பட்ஜெட்டில் சிறுபான்மையினர் மக்கள் மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் அறிவிப்புகள் வெளியாகும்.

தேசிய பாடலை முதலில் பாட வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே சுற்றறிக்கை கொடுத்திருக்கிறது மாநில அரசை பொருத்த அளவில் தமிழ்த்தாய் வாழ்த்தை தான் முதலில் பாடுவதற்கு உறுதியாக இருக்கிறோம் அதையே முழுமையாக பின்பற்றுவோம் அரசும் அதைத்தான் பின்பற்றும்.

நீதிமன்றம் தடை போட்டதற்காக ஏழு தொகுதியும் காலியாக வைத்திருக்க முடியாது தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் உரிய விளக்கம் அளித்து விரைவில் தேர்தல் நடத்துவதற்கான முயற்சி எடுப்பார்கள் நிச்சயம் அந்த தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடைபெறும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.