பாஜகவின் அடக்கு முறையை மக்கள் ஏற்கவில்லை-MP அருண் நேரு பேட்டி

0 277
Stalin trichy visit

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் கூட்டணி சார்பில் போட்டியிட்ட அருண் நேரு அமோக வெற்றி பெற்றார்.
இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் அருண் நேரு பேசும்போது அதிகளவு வாக்குகள் பெற்று வெற்றி பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக முதல்வர் கொண்டு வந்த திட்டங்கள் ஏழை மக்களுக்கு சென்றடைந்தது தான் வெற்றிக்கான முதல் காரணம். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த தமிழக முதல்வரின் கடின உழைப்பிற்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம்.
அரசு திட்டங்களை மக்களிடத்தில் முழுமையாக கொண்டு செல்ல வேண்டும். வெற்றி உறுதியாகி உள்ளது இன்னும் நல்லது செய்ய வேண்டும் வெற்றி என்பது முதல் படி தான் வேலை தான் அடுத்த கட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும். பெரம்பலூருக்கு ரயில் பாதை திட்டத்தை கொண்டு வருவது, விவசாயத்தை மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவது,
மூன்றாவது.இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரிக்கும் வகையில் பெரம்பலூர் பகுதியில் அதிகளவில் நிலம் இருப்பதால் இப்பகுதியில் தொழிற்சாலை துவங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பது என எண்ணற்ற பணிகள் உள்ளது .தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி.

அராஜகம் அடக்குமுறை எப்போதுமே வெற்றி பெற்றது இல்லை என்பதற்கு இந்த தேர்தல் ஒரு உதாரணம்.மக்களுக்கு எதிரான திட்டங்கள் வரும்போது அதை எதிர்த்து போராடும் தலைவர்களுக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்பதை இந்த தேர்தலில் காட்டியுள்ளனர்.
நாமக்கல்லில் இருந்து துறையூர் தா.பேட்டை வழியாக ரயில் பாதை திட்டம் செயல்படுத்துவதற்கு உரிய முயற்சியை மேற்கொள்வேன்  என்று கூறினார்.

வெற்றி முதல் படி தான் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே முக்கிய வேலை -பெரம்பலூர் MP அருண் நேரு
என்னைக்குமே ஜெயிக்காது
பாஜகவின் அடக்கு முறையை மக்கள் ஏற்கவில்லை
பாஜகவின் அடக்கு முறையை மக்கள் ஏற்கவில்லை-MP அருண் நேரு

Leave A Reply

Your email address will not be published.