முசிறி அருகே அய்யம்பாளையத்தில் வார சந்தை ஏலம்

0 216
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 14 முசிறி அருகே அய்யம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வார சந்தை ஏலம் நடைபெற்றது

திருச்சி மாவட்டம் ,முசிறி வட்டம் அய்யம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வாரச்சந்தை ஏலம் நடைபெற்றது. 1.7.2024 முதல் 31.6.2025. வரை உள்ள காலத்திற்கான ஏலத்தினை ஊராட்சி செயலர் ஆர்த்தி நடத்தினார். ஏலம் கேட்பதற்கான முன் தொகை கட்டிய நபர்கள் கலந்து கொண்டு ஏலம் கேட்டனர். கஸ்தூரி நாட்டார் என்பவர் ரூ 43 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். ஏலத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முசிறி காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.