முசிறி-தொட்டியம் வட்டத்தில் வருவாய் தீர்வாயம் ஜூன் 18 இல் தொடக்கம் : மாவட்ட ஆட்சியர்

0 362
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 14  முசிறி, தொட்டியம் வட்டத்தில் ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் வரும் ஜூன் 18ஆம் தேதி துவங்குகிறது.

திருச்சி மாவட்டம், முசிறி வட்டத்தில் ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் ஜூன் 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் துவங்குகிறது. ஜமாபந்தி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. வரும் ஜூன் 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தாத்தையங்கார்பேட்டை குறுவட்டத்தில் அடங்கிய பிள்ளா பாளையம், மகாதேவி, மோருப்பட்டி, கரிகாலி , வடமலைப்பட்டி, காருகுடி, ஊரக்கரை, ஜம்புமடை. வாள சிராமணி, தா.பேட்டை, மற்றும் பிள்ளாத்துறை கிராமங்களுக்கும் ஜூன் 19ஆம் தேதி புதன்கிழமை வளையெடுப்பு குறுவட்டத்தில் அடங்கிய தேவானூர்,, ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தம்பாறை, மாவலிப்பட்டி, மங்கலம், துலையா நத்தம், வாளவந்தி கிழக்கு , வாளவந்தி மேற்கு ஆகிய கிராமங்களுக்கும்

வரும் ஜூன் 20ஆம் தேதி வியாழக்கிழமை தும்பலம் குறுவட்டத்தில் அடங்கிய அஞ்சலம். கோணப்பம்பட்டி . சேருகுடி, பூலாஞ்சேரி, சூரம்பட்டி, தும்பலம், சிட்டிலரை, முத்தம்பட்டி, எம் புதுப்பட்டி மேல்பாகம், எம். புதுப்பட்டி கீழ்பாகம் ,காமாட்சி பட்டி ஆகிய கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெற உள்ளது. இதில் பட்டா சிட்டா ,பாதை பிரச்சனை, மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கும் மனுஅளித்து பலன் பெறலாம்ம்.

அதே போல்  தொட்டியம் வட்டத்தில்  ஜமாபந்தி முசிறி கோட்டாட்சியர் ராஜன் தலைமையில் நடைபெற உள்ளது. வரும் 18ஆம் தேதி ஏலூர்பட்டி குறு வட்டத்தில் அடங்கிய வாள்வேல் புத்தூர், எம் ., களத்தூர், நாகையநல்லூர், நத்தம், ஏலூர் பட்டி, காமலாபுரம், தோளூர் பட்டி மற்றும் எம் புத்தூர் ஊராட்சிகளுக்கும்,

வரும் 19ஆம் தேதி புதன்கிழமை காட்டுப்புத்தூர் குறு வட்டத்தில் அடங்கிய முருங்கை, கிடாரம், பிடாரமங்கலம், உன்னி யூர், பெரிய பள்ளிபாளையம், சின்ன பள்ளிபாளையம், ஸ்ரீராம சமுத்திரம், காட்டுப்புத்தூர் மேற்கு, காட்டுப்புத்தூர் கிழக்கு, சீலை பிள்ளையார் புத்தூர், காடுவெட்டி ஆகிய கிராமங்களுக்கும்,

ஜூன் இருபதாம் தேதி வியாழக்கிழமை தொட்டியம் குறுவட்டத்தில் அரசலூர், திருநாராயணபுரம், தொட்டியம், அரங்கூர், அப்பன நல்லூர், கொளக்குடி, சித்தூர், சீனிவாசநல்லூர், அலகரை, மணமேடு, மற்றும் முள்ளிப்பாடி ஆகிய கிராமங்களுக்கும் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற உள்ளது. இருபதாம் தேதி மாலை 3 மணி அளவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிகள் மாநாடு நடைபெறும். ஜமாபந்தியில் பட்டா, சிட்டா, பாதை பிரச்சனை, பல்வேறு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு மனு அளித்து தீர்வு பெறலாம் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். 

 

Leave A Reply

Your email address will not be published.