கலைஞர் கனவு இல்லம் பயனாளிகள் தேர்வு செய்யும் சிறப்பு கிராமசபைக்கூட்டம்

0 344
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டி ஊராட்சியில் சிறப்பு கிராமசபைக்கூட்டம். கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக குடியிருப்பு பழுதுபார்க்கும் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் 2024-25 ஆம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளின் பெயர்ப்பட்டியலை கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெரும் வகையில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் சூர்யாசுப்பிரமணியன் பயனாளிகள் பட்டியலை மன்றத்தில் வாசித்து ஒப்புதல் பெற்றார். அப்போது கல்வி வளர்ச்சிக்காக ஊராட்சியில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளதாகவும், விரைவில் தன்னிறைவு பெற்ற ஊராட்சி யாக மாற்ற வளர்ச்சி பணிகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

கூட்டத்தில் மக்கள் தங்களை கோரிக்கை மனுக்களை அளித்தனர். கிராமசபையில் வையம்பட்டி ஊராட்சி செயலாளர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆபரேட்டர்கள், பணிதள பொறுப்பாளர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட கூட்டத்தில் 250க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.