திருச்சி என்.ஐ.டி.யில் மகளிர் பாதுகாப்பு விழிப்புணர்வு

0 253
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 12 திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் (என்.ஐ.டி) உள்புகார் குழு (ஐசிசி) புதிதாக பணியமர்த்தப்பட்ட 127 ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஐசிசி தலைவர் டாக்டர் பி கலைச்செல்வி, நிகழ்ச்சியின் நோக்கங்கள் குறித்து விளக்கி கூறினார். பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பாலியல் வன்கொடுமை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டிகளை ஆசிரியர் புல முதல்வர் டாக்டர். குமரேசன், பதிவாளர் டாக்டர் என். தாமரைசெல்வன், தலைமை விஜிலென்ஸ்அதிகாரி டாக்டர் டி என் ஜானகிராமன், தலைமை விருந்தினர் வழக்குரைஞர் கோகிலா ஆகியோர் வெளியிட்டனர்.
மகளிருக்கான பாதுகாப்பான மற்றும் மரியாதையான பணிச்சூழலை உருவாக்குவதற்கு மற்றும்  பராமரிப்பது  குறித்து ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் நோக்கில் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.