அமைச்சர் உதயநிதி நிதி திருச்சி வருகை : தி.மு.க. நிர்வாகிகளுக்கு அமைச்சர் அழைப்பு

0 275
Stalin trichy visit

 திருச்சி, ஜூலை 30 திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இளைஞரணி செயலாளரும் அமைச்சரும் உதயநிதி ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நாளை (ஜூலை 31) மதியம் 2.00 மணிளவில் சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தருகிறார். அவரை வரவேற்க திமுக மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் , மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கழக தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பளிக்க வேண்டுமென்று அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.