கழிவறையில் பெண்ணை வீடியோ எடுத்தவருக்கு தர்மஅடி

0 260
Stalin trichy visit

கழிவறைக்குச் சென்ற பெண்ணை வீடியோ எடுக்க முயன்ற நபருக்கு தர்ம அடி கொடுத்து பொதுமக்கள் போலீஸிடம் ஒப்படைத்தனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரை அருகே உள்ள தனியார் கடை ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவர் இயற்கை உபாதையின் காரணமாக தெப்பக்குள தெருவில் உள்ள பொது கழிப்பறையை பயன்படுத்தியாக கூறப்படுகிறது.
அப்போது அருகிலிருந்த ஆண்கள் கழிப்பறையிலிருந்து மர்ம நபர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுப்பதை அந்தப் பெண் பார்த்துள்ளார் இதனை அந்தப் பெண் பார்த்து அதிர்ச்சி அடைந்து கூக்குரலிட்டார்.

அக்கம் பக்கத்தில் இருந்த நபர்கள் உடனே வீடியோ எடுத்த இளைஞரை தப்பி ஓடும்போது மடக்கி பிடித்தனர். அதன் பின்பு அந்த மர்ம நபருக்கு தர்ம அடி கொடுத்து, துறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதன் பின்பு துறையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தபோது அந்த மர்ம நபர் கொட்டையூர் மெய்யம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்(31) என்பதை கண்டுபிடித்தனர் அதன் பின்பு அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
பெண் ஒருவர் கழிப்பறை சென்ற போது வீடியோ எடுத்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.