மண்ணச்சநல்லூர் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்

0 194
Stalin trichy visit

திருச்சி, ஆக.12  சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜை  இன்று (ஆகஸ்ட் 12-ஆம் தேதி)  நடைபெறுகிறது. இந்த பூஜையானது விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் வாழ்வில் சிறக்க வேண்டி நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜைக்காக அச்சன்கோவிலில்  இருந்து கொல்லங்கோடு வழியாக கொண்டு செல்லப்படுகிறது.  இந்த நெற்கதிர்களை வீடுகளில் வைத்திருந்தால் வீட்டில் அனைத்து செல்வங்களும் பெருகும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜைக்காக ஆகஸ்ட் 9 ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த புத்தரிசி பூஜை முன்னிட்டு மண்ணச்சநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருக்கும் சுமார் 100கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் தமிழகத்தில் உள்ள விவசாயம் மற்றும் நீர் நிலைகள் செழித்திருக்க வேண்டி
மண்ணச்சநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற கள்ளி வனத்தாய் அம்மன் கோவிலில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து இருமுடி கட்டி சபரிமலை சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கொண்டனர். மேலும் இதையடுத்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.