மாணவர் இறந்த விவகாரம் : பள்ளி முன்பு கூடிய மாணவர் அமைப்பினர் கைது

0 348
Stalin trichy visit

திருச்சி, ஆக.12 திருச்சி பாரதிதாசன் சாலையிலுள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஆசிரியர்களின் கவனக்குறைவால் உயிரிந்தார். இச்சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அப்பள்ளியிலும் மாணவர்கள் பெற்றோர், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி பள்ளி நிருவாகத்தினர் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடந்த நான்கு தினங்களாக திருச்சியில் பெரும் பரப்பாக உள்ள விஷயத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பிலும் பாதிக்கப்பட்ட பெற்றோரின் நண்பர் என்ற முறையில் நமது அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் முன்னாள் மாநில துணை செயலாளர் தினேஷ் குமார் அமைப்பு தோழர்கள் பெற்றோர்கள் உடன் இன்று பள்ளி நிருவாகிகளை சந்தித்து பேச சென்றார்கள்.  வகுப்பு அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கு மாணவர் மன்றம் கண்டத்தை தெரிவித்துள்ளது. மேலும் பள்ளியின் முன்பு காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.