தாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்
திருச்சி, ஆக. 12 திருச்சி கோட்ட ரயில்வே நிருவாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு, தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்துக்கு வருகிற 18 மற்றும் 25 ஆம் தேதி ஆகிய நாட்களில் இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06012) அடுத்த நாள் காலை 11.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து (வண்டி எண்: 06011) ரயில் வருகிற 19 மற்றும் 24 ஆம் தேதி ஆகிய நாட்களில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை 3.45 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.