சுதந்திர தினத்தை முன்னிட்டு உலக சாதனை நடன நிகழ்ச்சி

0 596
Stalin trichy visit

திருச்சி, ஆக.14  இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சியில் 2,100 மாணவிகள் ஒன்றிணைந்து நிகழ்த்திய பிரம்மாண்ட உலகசாதனை நடனநிகழ்ச்சி.

சுதந்திர இந்தியாவின் 78 வது ஆண்டு சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட உள்ளது.

சுதந்திரத்திற்கு வித்திட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், இந்திய சுதந்திரதினத்தை கொண்டாடும் விதமாக சிவசக்தி அகாடமி சார்பில் பிரம்மாண்ட உலக சாதனை நிகழ்ச்சி திருச்சியில் இன்று நடைபெற்றது.

திருச்சியில் தனியார் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்ட உலக சாதனை நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தனது எழுச்சிமிகு பாடல்கள் மற்றும் கவிதைகளால் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்களை ஒருங்கிணைக்க செய்த முண்டாசு கவிஞன் பாரதியின் பாடலான “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடலுக்கு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 2100 மாணவிகள் ஒன்றிணைந்து நடனமாடினர்.
இந்த சாதனை நிகழ்வானது ஜீனியஸ் உலக சாதனை புத்தக குழுவினரால் அங்கீகரிக்கப்பட்டு அதற்கான சான்றிதழும் நிகழ்ச்சி மேடையில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகள் சிவ சக்தி அகாடமி நிறுவனர் .மீனா சுரேஷ், மாநகராட்சி மேயர் அன்பழகன், அஸ்வின் குடும்பம் உரிமையாளர் தகே ஆர் வி கணேசன், மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்..செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர், இந்த உலக சாதனை நிகழ்ச்சி ஆனது ஜீனியஸ் இன்டர்நேஷனல் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்டில் பதிவு செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.