போதையில்லா வாழ்க்கையைத் தேர்ந்தெடுங்கள் : விழிப்புணர்வு கருத்தரங்கம்

0 290
Stalin trichy visit

திருச்சி, ஆக. 14  திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப் பணித்துறை சார்பில் போதையில்லா வாழ்க்கையைத் தேர்ந்தெடுங்கள்” என்ற தலைப்பில்  நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் சமூக பணி துறை முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை, அறம் மனநல மருத்துவமனை மற்றும் தற்கொலை தடுப்பு கிளப் சார்பில் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் உள்ள கோல்டன் ஜூபிலி பிளாக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் “போதையில்லா வாழ்க்கையைத் தேர்ந்தெடுங்கள்” என்ற தலைப்பில் அறம் மருத்துவமனையின் மனநல ஆலோசகர் டாக்டர் அசர்நிஷா பேகம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் அறம் மருத்துவமனை மனநல ஆலோசகர் அகிலா உதவி பேராசிரியர் ப்ளோரன்ஸ் ஷாலினி,  மாணவர் ஆலோசகர் டேவிட் சாம்பால், பிஷப் கல்லூரியில் வேதியியல் உதவி பேராசிரியர் கேத்தரின் மீனா ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

இந்த கருத்தரங்கில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் சமூக பணி துறை முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துறை மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
இந்த கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை பிஷப் ஹீபர் கல்லூரியின் சமூக பணித்துறை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஸ்வேதா செய்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.