உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு திருச்சியில் மாநில சங்க லட்சினை கொடியேற்றம்

0 317
Stalin trichy visit

உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு திருச்சியில் மாநில சங்க லட்சினை கொடியேற்றம்…

திருச்சி, ஆக.19  ஆகஸ்ட் 19ம் தேதி ‘உலக புகைப்பட தினம்’ ஆக கொண்டாடப்படுகிறது.
அதன்படி இன்று(19.08.24) 185-ஆம் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு
ஆகஸ்ட்-19ம் நாளான இன்று, “185 ஆம் ஆண்டு உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு,
திருச்சி மாநகரம், வண்ணாரப்பேட்டையில் உள்ள ‘கலைக்கவி ஸ்டூடியோ’ அருகில், தமிழ்நாடு வீடியோ ஃபோட்டோ கலைஞர்கள் நலக்கூட்டமைப்பின் (TOOK) மாநில தொழிற்சங்க செயலாளர் P.விநாயகம் தலைமையில், திருச்சி மாவட்ட நலச்சங்கத்தின் துணைத் தலைவரும், மூத்த ஒளிப்படக் கலைஞருமான C.அண்ணாமலை அவர்கள் மாநில அமைப்பு கொடி ஏற்றினார்.
விழாவில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.சிவசங்கர்,  திருச்சி மாவட்டச் செயலாளர் ஜெய் (எ) S.N.ஜெயக்குமார், பொருளாளர் R.லட்சுமிபதி ராஜூ, துணைச் செயலாளர்கள் J.M.சந்தோஷ், S.ஆண்டனி ராஜூ, மாவட்ட முன்னாள் நிர்வாகிகள் தேவ் ரமேஷ், தர்மேந்திரா
மற்றும் வீடியோ ஆர்ட் சந்திரசேகர், முருகதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.