கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சு போட்டி: மாணவர்கள் பங்கேற்பு
திருச்சி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபொரும் பேச்சு போட்டி.. 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு..
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய,தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம் இளைஞர் அணி சார்பில் மாபெரும் பேச்சு போட்டி இன்று நடைபெற்றது..
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி பேச்சு போட்டியினை துவங்கி வைத்து சிறப்புரையாற்றினார். 200க்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்..
இந்த பேச்சு போட்டியில் கவிதை பித்தன் செந்தில் வேல்,வீசி சந்திரகுமார், கணேஷ் பாபு, குடியாத்தம் புவியரசி, வரவணை செந்தில் உள்ளிட்டோர் சிறப்பு நடுவர்களாக பங்கேற்றனர்..
“என் உயிரினும் மேலான” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பேச்சு போட்டியில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் உள்ளிட்ட ஒரு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஆனந்த், கார்த்தி, வெங்கடேஷ் குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அன்பழகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.