விஜயகாந்த் பிறந்த நாள் : வறுமை ஒழிப்பு தினமாக அனுசரிப்பு

0 349
Stalin trichy visit

திருச்சி, ஆக. 26 திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வையம்பட்டி தெற்கு ஒன்றியத்தில் தேமுதிகவின் சார்பில் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டது.

வையம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கே.டி.ஆர். குமார் தலைமையில் கடைவீதியில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பாரதிதாசன் கழக 30 அடி உயர கொடிக்கம்பத்தில் கழக கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.  தொடர்ந்து செக்கணம் கிராமத்தில் பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

விழாவில் அவைத்தலைவர் ஸ்வீட் பாலு, பொருளாளர் முத்தமிழ்ச்செல்வன், ஒன்றிய துணை செயலாளர்கள் பாட்ஷா, அன்பரசன், மணி, மாவட்ட பிரதிநிதி முருகேசன், மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் கார்த்திக், விவசாய அணி துணைச்செயலாளர் செல்வநாயகம், ஊராட்சி செயலாளர் முருகானந்து, மற்றும் நிர்வாகிகள் வேலுச்சாமி, கண்ணன், தோமாஸ், சக்தி, சதீஸ், மகளிர் அணி மாவட்ட செயலாளர் மாலதி சரவணன், ராஜா உள்ளிட்ட தேமுதிகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.