சமயபுரம் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா
திருச்சி, ஆக. 26 திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் ஆவணி மாதம் 2 ம் ஞாயிற்றுக்கிழமையில் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மன் காலையில் பல்லக்கிலும், இரவில் யானை உள்ளிட்ட பல் வேறு வாகனங்களிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அதன் படி, ஆவணி மாத 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்றிரவு அம்மன் காலையில் பல்லக்கில், எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவில் கோவில் உள்பிரகாரத்தில் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அதைத்தொடர்ந்து அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி மேள, தாளங்கள் முழங்க திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.