சாலை விபத்தில் முதியவர் உயிரிழப்பு
திருச்சி, ஆக.26 திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டியே அருகே பெரியகுளத்துப்பட்டியே சேர்ந்தவர் முத்துவேல் (வயது 75) இவர் இரண்டு சக்கரம் வாகனத்தில் பெரியகுளத்துப்பட்டி அருகே சென்ற போது சாலையோரத்தில் நின்ற லாரி மீது இரண்டு சக்கரம் வானம் மோதியது. இதில் படுகாயமடைந்த முத்துவேல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்