காவேரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்

0 202
Stalin trichy visit

திருச்சி, செப். 10  திருச்சி காவேரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் -பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிப்பு.

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருச்சி மாநகரத்துக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு மூன்று நாட்கள் பூஜை நடைபெற்று வந்தது .

இந்தநிலையில் நேற்று அனைத்து சிலைகளும் இன்று மாலை 6 மணிக்கு மேல் மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது.

விநாயகர் சிலைகள் விசர்ஜனத்தையொட்டி திருச்சி காவிரி பாலத்தில் தடுப்பு கட்டைகள் , ஆங்காங்கே மேடை, கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவை பொருத்தப்பட்டிருந்தது. மேலும்  விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதையிலும், சிலைகள் கரைக்கப்பட உள்ள காவிரி பாலத்திலும் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விநாயகர் சிலைகள் ஊர் வலத்தை முன்னிட்டு ஊர்வலம் சென்ற பாதையில் போலீஸ் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் போக்குவரத்தில் அவ்வப்போது சிறு, சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலங்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நடைபெற்றன.

Leave A Reply

Your email address will not be published.