TNPSC இன்ஸ்டியூட்டில் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு பாராட்டு

0 202
Stalin trichy visit

திருச்சி, செப். 11  திருச்சிTNPSC இன் ஸ்டியூட்டில் சார்பில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா திருச்சியில் நடைபெற்றது:-

திருச்சி டிஎன்பிஎஸ்சி இன்ஸ்டியூட்டில் சார்பில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு திருச்சி டிஎன்பிஎஸ்சி இன்ஸ்டியூட் நிறுவனர் நவின் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக நாமக்கல் மாவட்ட சிறைத்துறை நன்னடத்தை அலுவலர் குமரேசன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பிளாக் டெவலப்மென்ட் ஆபீசர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு குரூப் 2 குரூப் 4 தேர்வுகளில் வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தனர்.

அந்த வகையில் மாநில அளவில் பத்தாவது ரேங்க் எடுத்த அஜய் குமார் மற்றும் குரூப் 2 தேர்வில் கோகுல்ராஜ், கிறிஸ்டி ஜெயசீலி, ராஜா, கனிமொழி, மோகன வள்ளி மற்றும் விக்னேஷ்வரன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. சாதனையாளர்கள் அவர்களது உறவினர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.