விதை நேர்த்தி குறித்து வேளாண் மாணவிகள் செயல்விளக்கம்
திருச்சி, செப். 11 மக்காசோளத்தில் டிரைக்கோடெர்மா விரிடி (உயிர் பூஞ்சைக் கொல்லி) வைத்து விதை நேர்த்தி குறித்து செயல்விளக்கம் அளித்த வேளாண் மாணவிகள்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் கிராமத்தில் மக்காசோளத்தில் டிரைக்கோடெர்மா விரிடி (உயிர் பூஞ்சைக் கொல்லி) வைத்து விதை நேர்த்தி குறித்து செயல்விளக்கம் அளித்த வேளாண் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவிகள்.
திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த இளங்கலை வேளாண்மை இறுதி ஆண்டு மாணவிகள் விசாலினி, விக்னேஷ்வரி, அபிநயா, கயல்விழி, ரேணுகா தேவி ஆகியோர் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் மண்ணச்சநல்லூர் பகுதிகளில் பல்வேறு விவசாயம் சார்ந்த நிகழ்ச்சிகளையும், விழிப்புணர்வுகளையும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்ப்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் கிராமத்தில் மக்காசோளத்தில் டிரைக்கோடெர்மா விரிடி (உயிர் பூஞ்சைக் கொல்லி) வைத்து விதை நேர்த்தி செய்வது குறித்து செயல்விளக்கம் காட்டினர். இவ்வாறு விதை நேர்த்தி செய்வதால் பூஞ்சை நோய்த் தாக்குதலைக் குறைக்க முடியும். திரவ வகை டிரைக்கோடெர்மா விரிடியை ஒரு லிட்டருக்கு 10 மி.லி என்ற அளவில் விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்து பயன்பெறலாம். இதனால் வேர் அழுகல் மற்றும் இதற பூஞ்சை நோய் தாக்கத்தலிருந்து பயிரைப் பாதுகாக்கலாம் என மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர்