அதிமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் இமானுவேல் சேகரன் நினைவுநாள் அனுசரிப்பு
திருச்சி, செப். 11 திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் சுதந்திர போராட்ட தியாகி இமானுவேல் சேகரன் 67-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருஉருவ படத்திற்கு புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர்கள் M.பாலசுப்ரமணியன், S.பாஸ்கர் என்கிற கோபால்ராஜ், A.தண்டபாணி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் N.கார்த்திக், முன்னாள் மாவட்ட MGR இளைஞர் அணி செயலாளர் L.முத்துக்குமார், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் M.சுரேஷ்குமார், முன்னாள் மாமன்ற உறுப்பினர் Er.S. ராஜா, முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் ஜெ.பாலமூர்த்தி, வட்ட கழக செயலாளர் அன்புதுரை, KP.சங்கர், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர்கள் கோர்ட் A.M.சரவணன், கோதை ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.