தமிழர் தேசம் கட்சியினர் சாலைமறியல்
திருச்சி, செப். 25 மணப்பாறை அருகே காவல்துறையை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட தமிழர் தேசம் கட்சியினர் 19 பேர் கைது.
திருச்சி மாவட்டத்தில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு நிலங்களை அபகரிப்பவர்கள் குறித்து ஆபரேஷன் அகழி என்கிற பெயரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் வீடுகளில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று திருச்சி மாவட்டம், ராம்ஜி நகர் அருகே கொத்தமங்கலம் பகுதியில் உள்ள தமிழர் தேசம் கட்சி மற்றும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவருமான கே.கே.எஸ்.செல்வகுமார் வீட்டில் போலீசார் இன்று சோதனை செய்ய சென்றனர். செல்வகுமாரை சமூக விரோதிபோல் சித்தரித்து அவரது பெயருக்கு கலங்கம் விளைவிப்பதாகக்கூறி காவல்துறையை கண்டித்து திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டியில் திண்டுக்கல் சாலையில் தமிழர் தேசம் கட்சியினர் கண்டன முழக்கங்கள் எழுப்பியவாறு சாலைமறிலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் மறியலில் ஈடுபட்ட 18 பேரை கைது செய்தனர்.