காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் : அமைச்சர் பேட்டி

0 207
Stalin trichy visit

திருச்சி, செப். 25 காலாண்டு தேர்வு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் வரையிலான வட்ட பேருந்து சேவையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று கொடிஅசைத்து துவக்கி வைத்தார். இந்த பேருந்து சத்திரம் பேருந்து நிலையம், கீழப்புலிவார் சாலை, (இ.பி ரோடு), காந்தி சந்தை, பாலக்கரை, மத்திய பேருந்து நிலையம், , மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம், அரசு மருத்துவமனை, உறையூர், மீண்டும் சத்திரம் பேருந்து நிலையத்தை வந்து அடைந்து சுற்றுவட்ட பேருந்தாக செல்ல இருக்கிறது.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் மண்டல குழு தலைவர் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருச்சி மண்டலத்தின் பொது மேலாளர் அ.முத்துகிருஷ்ணன், துணை மேலாளர் வணிகம் ஆர்.சாமிநாதன், கோட்ட மேலாளர் புகழேந்திராஜ்,பகுதி கழகச் செயலாளர் மோகன் மாமன்ற உறுப்பினர் மணிமேகலை வட்டக்கழகச் செயலாளர் சங்கர். கழக நிர்வாகிகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி, கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு அரசு போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. சென்னை, மதுரை, கோவைக்கு அடுத்தபடியாக, திருச்சி பெரிய நகரமாக இருக்கிறது. எனவே, திருச்சியை தலைமையிடமாக கொண்டு தனி போக்குவரத்து கோட்டம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை உள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்குவது குறித்து ஆதவ் அர்ஜீன் பேசிய கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து, முதிர்ச்சியற்ற கருத்து என கட்சியின் மாநில நிர்வாகிகளே தெரிவித்து விட்டனர். எனவே இது குறித்து விரிவாக பேச விரும்பவில்லை.

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது இது குறித்து பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை செயலாளரிடம் பேசி உள்ளேன் இது தொடர்பாக இன்று அறிவிப்பு வெளியாகும்.

வி.சி.க சார்பில் நடைபெறும் மதுவிலக்கு மாநாடு நல்ல நோக்கத்திற்காக நடத்தப்படக்கூடிய மாநாடு. மக்கள் விழிப்புணர்வுக்காக நடத்தப்படுகிறது இதில் அரசியல் கலக்கக்கூடாது என விசிக தலைவரும் தெரிவித்துள்ளார் மதுவிலக்கு துறை அமைச்சரும் தெரிவித்துவிட்டார் என கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.