புரட்டாசி சனிக்கிழமை : ஸ்ரீரங்கத்தில் குவிந்த பக்தர்கள்

0 238
Stalin trichy visit

திருச்சி, செப். 28  புரட்டாசி 2வது சனிக்கிழமை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் குவிந்தனர்.  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் இன்று தரிசனம்.

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நம்பெருமாள், சக்கரத்தாழ்வார், கிருஷ்ணர் சன்னதி, தாயார் சன்னதியில் எள், மற்றும் நெய்விளக்கிட்டும் மற்றும் அணையாவிளக்கில் தாங்கள் கொண்டு வந்த நெய்யை ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.

வரிசையில் நிற்கும் வயதான பக்தர்கள் வசதிக்காக இருக்கைகள் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.

பக்தர்கள் வருகையையொட்டி கூட்டநெரிசலின்றி வழிபாடு செய்வதற்காக ஆலய நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது..

 

Leave A Reply

Your email address will not be published.