ஆப்ரேசன் அகழி சோதனையில் ஆவணங்கள், ரொக்கப்பணம் பறிமுதல்

0 257
Stalin trichy visit

திருச்சி, செப்.28 திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெரிவித்திருப்பதாவது,

திருச்சி மவட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த சரித்திரபதிவேடு குற்றவாளிகள் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு பொது மக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக புகார்கள் எழுந்தன.அதை யடுத்து, திருச்சி மாநகர காவல் ஆணையர், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்\ஆபரேசன் அகழி என்ற பெய ரில் 14 காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து, 4 பட்டியல்கள் தயார்செய்யப்பட்டு, முதல் பெயர் பட்டியலில் உள்ளவர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். இதில், சந்தேகத்துக்குரிய நபர்களான பிரபு என்ற பப்லு, ஜெயக்குமார் என்ற கொட்டப்பட்டு ஜெய், மைக்கேல் சுரேஷ் என்ற பட்டறை சுரேஷ், டேவிட்சகாயராஜ், பாலு என்ற பாலமுத்து, பிரதாப் என்ற சிங்கம் பிரதாப்,ராஜகுமார், கருப்பையா, பாதுஷா என்ற பல்பு பாட்ஷா, கரிகாலன், கோபாலகிருஷ்ணன் என்ற தாடிகோபால்,சந்திரமவுளி, குருமூர்த்தி மற்றும் கிருஷ் ணன் ஆகியோரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு கடந்த 19ம்தேதி, அவர்கள் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் தனிப்படையினர்சோதனை நடத்தி, கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படை யில் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில், நேற்று நடந்த ‘ஆபரேசன் அகழி சோதனையில் இந்த வழக்குகளில் தலைமறைவாக இருந்துவரும் சாத்தனூர் அண்ணாமலைக்கு தொடர்புடைய அலுவலகம், அண்ணாமலையின் பினாமி சாத்தனூர் ராஜ்குமார், அண்ணாமலையுடன் உறவில் இருந்துவரும் கே.கே. நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த மீனாட்சி ஆகியோரின் அலுவலகம் மற்றும் வீடுகளில் நடந்த சோதனையில் சாத்தனூர் ராஜ்குமார் வீட்டில் அவருக்கு சம்மந்தம்இல்லாத 17 பத்திர ஆவணங்கள், மீனாட்சி வீட்டில் 10 பத்திர ஆவணங்கள், 70 பவுன் நகைகள், கணக்கில் வராத ரூ. 18 லட்சத்து 92 ஆயிரத்து 750 ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு, எஸ்பி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.