திருச்சியில் தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

0 265
Stalin trichy visit

திருச்சி, செப். 30 அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிற்பகல் துணை முதல்வராக பொறுப்பேற்றார். முன்னதாக நேற்று காலை இதுகுறித்து அறிவிப்பு இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் இனிப்புகள், பட்டாசு வெடித்து கொண்டாடினர் அதன் ஒரு பகுதியாக திருச்சியில் கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு வழிகாட்டுதலின்படி மத்திய மாவட்டம் திமுக சார்பில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி தலைமையில் மாநகர செயலாளரும் மாநகர மேயருமான அன்பழகன் முன்னிலையில் திமுகவினர் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினர்..

இந்நிகழ்வில் கோட்டத் தலைவர் துர்கா தேவி, பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், கமால் முஸ்தபா உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.