லால்குடியில் கலாம்ஸ் உலக சாதனை

0 365
Stalin trichy visit

திருச்சி, செப். 30  திருச்சி மாவட்டம் லால்குடியில் கலாம்ஸ் முதன்முறையாக SIP அபாகஸ் மாணவர்கள் 150 பேர் இணைந்து மூன்று வரிசை மூன்று காலம் எண் உள்ள 42,000 கணக்குகளை வெறும் 30 நிமிடத்தில் விடையளித்து கலாம் ஸ் உலக அமைப்பு புத்தகத்தில் இடம் பெற்றனர்.

லால்குடி அருகே ஆங்கரையில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்ற இந்த உலக சாதனை நிகழ்வானது கலாம்ஸ் உலக சாதனை நிர்வாக இயக்குனர் குமரவேல் முன்னிலையில் நடந்தது . சிறப்பு விருந்தினர்களாக பிரவீன் பில்டர்ஸ் பொறியாளர் ரவிச்சந்திரன், லால்குடி கவிஞர் ஜெயராமன் , அறம் செய் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் பம்பரம்சுத்தி க.ரெங்கநாதன், காட்டூர் SIP அபாகஸ் நிர்வாக இயக்குனர் சரத் லால்குடி மற்றும் காட்டூர் SIP அபாகஸ் நிறுவன ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். உலக சாதனை நிகழ்வை லால்குடி SIP அபாகஸ் நிர்வாக இயக்குனர் தனசேகரன் ஒருங்கிணைத்தார்கள்.
உலக சாதனை நிகழ்விற்கு வந்திருந்த அனைவருக்கும் லால்குடி SIP அபாகஸ் முதல்வர் டாக்டர் பரிமளா நன்றி கூறினார்

Leave A Reply

Your email address will not be published.