திருச்சி காவேரி மருத்துவமனையில் நவீன இருதய சிகிச்சை
திருச்சி, அக். 4 காவேரி மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட சீரற்ற இதய துடிப்பு பிரச்சனை கொண்ட நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது:-
இது குறித்து திருச்சி காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனை செயல் இயக்குனர் செந்தில்குமார் மற்றும் எலக்ட்ரோபிஸியாலஜி நிபுணர் ஜோசப் ஆகியோர் நிருபர்களிடம் கூறியது:
திருச்சி காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனையில் சீரற்ற இதய துடிப்புகளை கண்டறிந்து சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. 2021ம் ஆண்டு காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனையில் 3டி தொழில்நுட்ப வசதிகள் கொண்ட எலக்ட்ரோ பிஸியாலஜி (EP ) ஆய்வகம் தொடங்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட சீரற்ற இதய துடிப்பு பிரச்சனை கொண்ட நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 2023ம் ஆண்டு பிரத்யேக குழந்தைகள் நல எலக்ட்ரோ பிஸியாலஜி பிரிவு தொடங்கப்பட்டது. எலக்ட்ரோ பிசியாலஜி துறையில் புதிய பாடத்திட்டத்தை (FNB) தொடங்குவதற்கு தேசிய தேர்வு வாரியம் அங்கீகாரம் அளித்துள்ளது என்றனர். நிகழ்ச்சியில் டாக்டர் கோகுலகிருஷ்ணன், சீனியர் பொது மேலாளர்கள் மாதவன், ஆன்ட்ரோஸ் நித்யதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.