தேசிய ஸ்குவாஷ் போட்டிக்கு திருச்சி பள்ளி மாணவி தேர்வு
திருச்சி, அக்.4 தேசிய ஸ்குவாஷ் போட்டிக்கு தமிழக அணி சார்பாக திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி தேர்வு
சென்னையில் 01.10.2024 அன்று இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு (School Games Federation of India) நடத்திய தேசிய அளவிலான Squash தகுதி போட்டியில் சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி செல்வி.எம்.ஹேமா(14வயது உட்பட்ட பிரிவில் ) தேசிய அளவிலான ஸ்குவாஷ் (National Level Squash) போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மாணவிக்கு திருச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். மேலும் திருச்சி சேவா சங்கத்தின் செயலர் சி.சரஸ்வதி, பொருளாளர் லஷ்மி சுப்ரமணியன், உபதலைவி கமலா பண்டாரி, தலைமையாசிரியை அழ.நாகம்மை மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் இ.சத்தியப்பிரியா, திருமதி.டி.சந்தானபிரியா, ஆர்.குணசேகரன் ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
மாணவியின் பெற்றோர் எம்.மதுரைவீரன், எம் . மேனகா அனைவரும் பாராட்டினார்கள்.