மணப்பாறையில் அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் AlCCTU ஆர்ப்பாட்டம்
திருச்சி, அக். 5 திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் AlCCTU சார்பாக அரசு மருத்துவமனை முன்பு AlCCTU ஆட்டோ நிலையத்தில் இருந்த கொடிகம்பம் மற்றும் சங்க பலகையை திருடிச்சென்ற சமூக விரோதிகள் மீது மணப்பாறை காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை உடனடியாக
கொடி கம்பம் மற்றும் பலகையை திருடிச்சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி
மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே ஆட்டோ சங்க செயலாளர் R. கமல் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் கண்டன உரையாக AlCCTU மாநில துணைத் தலைவர் M.பால்ராஜ்,
மாநில செயற்குழு உறுப்பினர் இரா,ரவி CPI(ML) மாநிலகுழு உறுப்பினர் வழக்கறிஞர் S,ராஜ்குமார், நகரசெயலாளர் P. பாலு ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்,
போராட்ட முடிவில் காவல்துறை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு
நிகழ்வில் CPI(ML) ஒன்றிய செயலாளர் M.தங்கராஜ், மாவட்டகுழு உறுப்பினர்கள் K.கருப்பையா,
K. மாசிலாமணி, மெக் S. இளையராஜா, மற்றும் ஆட்டோ சங்க பொருளாளர் ராயப்பன், பாலகுமரன், மற்றும் ஆட்டோசங்க நிர்வாகிகள் CPI(ML) நகரகுழு மற்றும் ஒன்றியகுழு உறுப்பினர்கள் பங்கேற்று கோஷங்கள் எழுப்பினர்.