மாயமான வாலிபர் கிணற்றில் சடமாக மீட்பு

0 187
Stalin trichy visit

திருச்சி, அக். 5  திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த எப்.தொப்பம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 21) கடந்த இரண்டு நாட்களாக வீட்டிற்கு வராத நிலையில் அவரது குடும்பத்தினர் அவரை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான சுமார் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் மர்மமான முறையில் சடலமாக மிதந்தார். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.