வண்ணத்துப்பூச்சி பூங்காவை இலவசமாக பார்வையிடலாம்
திருச்சி. அக்.5 திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்காவில் 3 நாட்கள் பொதுமக்கள் பார்வையிட இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருச்சி மாவட்ட வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேசிய வனவிலங்கு வாரம் ஒவ்வொரு ஆண்டும் அக்.2 முதல் 8 வரை அனுச சரிக்கப்படுகிறது.
அதனையொட்டி திருச்சி மாவட்டத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவை திருச்சி மாவட்ட பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டவர்கள் அக்.5 முதல் 7 ஆம் தேதி வரை இலவசமாக பூங்காவை பார்வையிடலாம் என அறிவித்துள்ளனர்.
இந்த இலவச அனுமதி வழங்கப்பட்டதின் நோக்கம், பூங்காவை பார்வையிட வரும் பொது மக்கள், மாணவ, மாணவிகள், சுற்றுலா பயணி களுக்கு வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இயற்கை வளத்தை பாதுகாக்கவும், காடுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
எனவே இதன் மூலம் விலங்குகள் பட்டாம்பூச்சியின் வரலாறை மக்கள் தெரிந்து கொள்ளலாம். எனவே இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வாகன நிறுததுவதற்கு கட்டணமாக மிதிவண்டிக்கு 5 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும், மகிழுந்துக்கு 20 ரூபாயும், சிற்றுந்து பேருந்துகளுக்கு 75 ரூபாயும் இங்கு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.