ஸ்ரீரங்கத்தில்  நவராத்திரி விழா தொடக்கம்

0 210
Stalin trichy visit

திருச்சி, அக்.5  ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாா் நவராத்திரி உற்சவ பெருவிழா வெள்ளிக்கிழமை(அக்.4) மாலை தொடங்கியது. வரும் 12 ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறும் விழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை பகல் 2 மணி முதல் 4 மணி வரை மூலஸ்தானத்தில் ஸ்ரீரங்கநாச்சியாா் தாயாா் திருமஞ்சனம் கண்டருளினாா். மாலை 6. 30 மணிக்கு அவா் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலு மண்டபத்துக்கு சிறப்பு அலங்காரத்தில் வந்து சோ்ந்தாா்.

தொடா்ந்து 7. 45 மணிக்கு நவராத்திரி கொலு தொடங்கியது. 8. 45 மணி வரை எழுந்தருளிய ஸ்ரீரங்கநாச்சியாா் தாயாரை ஏராளமானோா் தரிசித்தனா். பின்னா் 9. 45 மணிக்கு புறப்பட்டு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் ஸ்ரீரங்கநாச்சியாா் தாயாா். விழாவையொட்டி பகல் 12. 30 மணிக்கு பிறகு ஸ்ரீரங்கநாச்சியாா் தாயாா் மூலஸ்தானச் சேவை கிடையாது.

விழாவின் 2 ஆம் நாளான சனிக்கிழமை, 3 ஆம் நாளான 6 ஆம் தேதி, 4 ஆம் நாளான 7 ஆம் தேதி, 5 ஆம் நாளான 8 ஆம் தேதி, 6 ஆம் நாளான 9 ஆம் தேதி, 8 ஆம் திருநாளான 11 ஆம் தேதியும் ஸ்ரீரங்கநாச்சியாா் தாயாா் நவராத்திரி கொலு மண்டபத்தில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதிக்கிறாா். 7 ஆம் நாளான 10 ஆம் தேதி ஸ்ரீரங்கநாச்சியாா் தாயாரின் திருவடிச் சேவை நடைபெறவுள்ளது. 9 ஆம் திருநாளான 12 ஆம் தேதி சரஸ்வதி பூஜையன்று அம்பு போடுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுறுகிறது.

Leave A Reply

Your email address will not be published.