மணப்பாறை அருகே 90,000 ரூபாய்க்கு ஏலம் போன ஜல்லிக்கட்டு காளை

0 208
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கே.உடையாபட்டியைச் சேர்ந்த சுப்பாயி உடையார் என்பவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காளை ஒன்றை வாங்கி அதை செவலூர் முனியப்பன் கோவிலுக்கு நேர்ந்து விட்டார். அந்த காளையை வாடிவாசல்களில் கோவில் பெயரிலேயே அவிழ்த்தும் வந்த நிலையில் அந்த ஜல்லிக்கட்டு களத்தில் வீரர்களை பந்தாடி தனக்கென தனி முத்திரை பதித்து வந்தது. இந்நிலையில் அந்த காளை இன்று காலை ஏலம் விட்டப்பட்டது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பலரும் ஏலத்தில் கலந்து கொண்ட நிலையில் ஆயிரம் ரூபாயில் ஏலம் தொடங்கிய நிலையில் போட்டி போட்டு ஏலம் கேட்டனர். இறுதியில் 90 ஆயிரம் ரூபாயில் முடிவு பெற்றது. கல்கொத்தனூரைச் சேர்ந்த பிரித்திவிராஜ் என்ற வாலிபர் காளையை வாங்கினார். இதையடுத்து சிறப்பு வழிபாடுகளுக்கு பின் காளையை வானத்தில் ஏற்றிச் சென்றனர். இந்த காளை விற்ற தொகையை அந்த பகுதி மக்களுக்கு அன்னதானம் வழங்கிட முடிவு செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.