சிறப்பு மருத்துவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

0 199
Stalin trichy visit

திருச்சி, அக். 9 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை(UDID) வழங்கிட இணைய வழி மருத்துவச்சான்று பதிவேற்றம் செய்திட சிறப்பு மருத்துவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தலைமையில் இன்று  நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே மாதிரியான அடையாள அட்டை UDID-(Unique disability Identity card) இணையதளம் வாயிலாக வழங்குவது குறித்து அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் சிறப்பு மருத்துவர்களுக்கு 09.10.2024 மற்றும் 10.10.2024 ஆகிய தேதிகளில் இரண்டு பிரிவுகளாக ஒரு நாள் பயிற்சி நடைபெறவுள்ளது. இந்த புத்தாக்கப் பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் துவக்கி வைத்து பேசுகையில், 

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறையினால் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) Unique disability Identity card வழங்க 2017-ல் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை/குடும்ப அட்டை/வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளியின் புகைப்படம், மாற்றுத்திறனாளியின் இரத்தம் போன்ற ஆவனங்களுடன் அவர்கள் குடியிருப்பின் அருகாமையில் அமைந்துள்ள கூட்டுறவு துறை இ- சேவை மையங்கள், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க இ-சேவை மையங்கள் மற்றும் பொது இ-சேவை மையங்களில் பதிவு செய்யப்படுகிறது. அவ்வாறு விவரங்களை பதிவு செய்தவர்களுக்கு பதிவு விவரங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) Unique disability Identity Card ஸ்மார்ட் கார்டு வடிவில் அஞ்சல் மூலமாக அவரவர் இருப்பிடத்திற்கே அனுப்பி வைக்கப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் 48636 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அட்டைகள் வழங்கப்பட்டு அதில் இதுவரை 47,817 நபர்களுக்கு www.swavlambancard.gov.in என்ற இணையதளத்தில் பதிவு மேற்கொண்டு 07.10.2024 வரை 47,664 தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) Unique disability Identity Card ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தினை வலுப்படுத்தும் விதமாகவும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற வைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் சிரமங்களை குறைப்பதற்கு வட்டார அளவில் உள்ள மருத்துவமனைகளில் ஒரே மாதிரியான அடையாள அட்டை (UDID) இணையதளம் வாயிலாக வழங்குவது குறித்து அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 92 சிறப்பு மருத்துவர்களுக்கு இரண்டு பிரிவுகளாக ஒரு நாள் பயிற்சி இன்று 09.10.2024 மற்றும் நாளை 10.10.2024 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது என தெரிவித்தார்.

இந்நிகழ்வில், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ்.குமரவேல், இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) பி.பரமசிவன், மாவட்ட சுகாதார அலுவலர் சுப்ரமணியன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், உதவி செயல்படுத்தும் அலுவலர் ரமேஷ், சிறப்பு மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.