புத்தாநத்தம் ஸ்பார்டன்ஸ் சார்பில்சிறுவர் கபாடி போட்டி

0 368
Stalin trichy visit

திருச்சி, அக். 12  புத்தாநத்தம் ஸ்பார்டன்ஸ் சார்பில் 2 ஆம் ஆண்டு சிறுவர் கபாடி போட்டி மணப்பாறை டி. எஸ். பி. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

புத்தாநத்தம் ஸ்பார்டன்ஸ் சார்பில் 2 ஆம் ஆண்டு சிறுவர் கபாடி போட்டியை வெள்ளிக்கிழமை இரவு வி கே. சி. மீரான் மைதானத்தில் மணப்பாறை டி. எஸ். பி. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் ஸ்பார்டன்ஸ் காபடி குழு செயல்பட்டு வருகிறது. இந்த கபாடி குழு பல்வேறு இடங்களில் சென்று பல்வேறு போட்டிகளில் சென்று சுமார் 7 க்கு மேற்பட்ட கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்பார்டன்ஸ் கபாடி குழு சார்பில் 2 ஆம் ஆண்டு சிறுவர் கபாடி போட்டி புத்தாநத்தம் வி. கே. சி. மீரான் மைதானத்தில் 11.10.2024 வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவிற்கு ஸ்பார்டன்ஸ் கபாடி குழு நிர்வாகிகள் கேப்டன் சு. முகமது யாசர், டீம் கேப்டன் அ. முகமது அனஸ், சு. அத்துனுன் அகமது, ப. முகமது இஸ்மாயில், அ. முகமது அஸ்பர், அ முகமது சுஹைல், அ. நிவாஸ் அலி, மு. முகமது தாரிக், அ. முகமது அர்ஸீத், உ. சேக் அப்துல்லா, உ. முஹம்மது சபீக், ப. அபு, அ. மு.முஹம்மது அப்சல், அ. முஹம்மது ரில்வான், மு. அப்துல் காதர் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தார்கள்.

2 ஆம் ஆண்டு சிறுவர் கபாடி போட்டியை வெள்ளிக்கிழமை இரவு வி கே. சி. மீரான் மைதானத்தில் மணப்பாறை டி. எஸ். பி. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். விழாவில் புத்தாநத்தம் ஊராட்சி மன்ற உறுப்பினர் பள்ளப்பட்டி ராஜாமுஹப்மது, திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ராசி ராஜா முஹம்மது, மவ்லவி முஹம்மது இம்ரான் மிஸ்பாஹி, வழக்கறிஞர் ரஹீம் கான், புத்தாநத்தம் ஜமாஅத் செயலாளரும், மூத்த ஊடகவியலாளர் எம். கே. ஷாகுல் ஹமீது மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

இந்த சிறுவர் போட்டிகளில் கலந்து பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 50க்கு மேற்பட்டோர் அணிகள் கலந்து கொண்டார்கள். இதன் இறுதி போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு
முதல் பரிசு ரூ. 10 ஆயிரமும், இரண்டாவது பரிசு 8 ஆயிரமும், மூன்றாவது பரிசு 6 ஆயிரமும், நான்காவது பரிசு 4 ஆயிரமும், ஜந்து மற்றும் ஆறாவது பரிசு 2 ஆயிரமும், ஏழ மற்றும் எட்டாவது பரிசு ஆயிரமும் மற்றும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அனைவருக்கும் கோப்பைகள் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை புத்தாநத்தம் ஸ்பார்டன்ஸ் கபாடி குழு ஏற்பாடுகளை செய்து இருந்தது.

Leave A Reply

Your email address will not be published.