ரேபீஸ் நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு
திருச்சி, ஜன.13 திருச்சியில் ரேபீஸ் நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் நாய் பராமரிப்பு குறித்த கண்காட்சி நடைபெற்றது. இதில் பொமேரியன், டேஸ்ஹவுண்ட், பக், பீகிள், ராட்வீலா, காக்கா ஸ்பேனியல், புல்டாக், செயின்ட் பெனாட், கிரேடன், டாபாமேன், மினியேச்சா பின்சா, சலூகி, பூடூல் உள்ளிட்ட வகைகளும், இந்திய வகைகளான ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை என 35 வகையான நாய்கள் போட்டியில் பங்கேற்றன. ஒவ்வொரு நாயின் அடிப்படை தகுதிகளான உடல் கட்டமைப்பு, கட்டளைக்கு கீழ்படிதல், நடை, ஓட்டம், சுறுசுறுப்பாக இயங்குதல், உரிமையாளரின் பராமரிப்பு, தோற்றம் ஆகியவற்றைக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, அதில் முதலிடம் பிடித்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் நாய்கள் பல உடைகள் அணிதும், பூ, காலணி, தொப்பி போன்றவை அணிந்து பார்வையாளர்களை கவர்ந்தது. இந்த நாய்கள் கண்காட்சியை ஏராளமானோ கண்டு ரசித்தனர்.