காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

0 313
Stalin trichy visit

திருச்சி, ஜன.22  விளை நிலங்களில் சேதம் ஏற்படுத்தும் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த  விவசாயிகள்  கோரிக்கை.

திருச்சி மாவட்டம், முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா தலைமை வகித்தார்.
வட்டாட்சியர்கள் லோகநாதன், மோகன், சேக்கிழார். சமூக நல வட்டாட்சியர்
வீரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துறை சார்ந்த அலுவலர்கள் அரசின் திட்டங்கள் குறித்து பேசினர்.
கூட்டத்தில் விவசாயிகள் நிலத்தை அளந்து கொடுப்பதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். முசிறி பார்வதிபுரத்தில் வீடுகள் உள்ள இடத்தில் தண்ணீர் தேங்கி சீமை கருவேலமுள் வளர்ந்துள்ளது. அதனை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்.
உப்பிலியபுரத்தில், துறையூர், சேலம் நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்கும் நடைமுறையை பின்பற்றாமல் அமைக்கப்பட்டுள்ளதால் விபத்துக்கள் ஏற்படுகிறது.எனவே வேகத்தடையை முறையாக அமைக்க வேண்டும்,
முதியோர் பென்சன் வழங்க தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு திட்டத்தின் பயனை வழங்க வேண்டும், முசிறி மக்கள் அங்காடி ரேஷன் கடை முன்பு உள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டும், வடகரை வாய்க்கால் தலைப்பை மாற்றி அமைக்க வேண்டும். விளை நிலங்களில் சேதத்தை ஏற்படுத்தும் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துப் பேசினர். கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.